ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் அர்ஜுன், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘கொலைகாரன்’.

‘The Devotion of Suspect X’ என்ற ஜப்பானிய நாவலைத் தழுவி ‘கொலைகாரன்’ படம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர்.

படம் ரிலீஸாகியுள்ள இந்த நிலையில், அதில் இடம்பெற வேண்டிய ஒரு ஸ்லைடு விடுபட்டுவிட்டதாக ட்வீட் செய்துள்ளார் இயக்குநர்.

“அன்பான ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கவனத்துக்கு, படத்தின் தொடக்கத்தில் இந்த ஸ்லைடு இடம்பெறத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஃபைனல் பிரின்டில் இது விடுபட்டுவிட்டது. ஒரு இயக்குநராக நான் இதை ஒப்புக் கொள்கிறேன். ‘கொலைகாரன்’ படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார் ஆண்ட்ரு லூயிஸ்.