ஜூன் 7ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதி தள்ளி போன ‘கொலைகாரன்’……!

விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலைகாரன்’ படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இப்படத்தை, தியா மூவிஸ் சார்பில் பி.பிரதீப் தயாரிக்க, ஃபாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆஷ்மிகா , நாசர், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜூன் 5 ஆம் தேதி வெளியாக இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 7 ஆக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கும் நிலையில், நாளை (ஜூன் 5) முதல் ‘கொலைகாரன்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: arjun, kolaikaran, Nasar, vijay antony
-=-