குடியரசு தினத்தன்று வெளியாகிறது நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’ !

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘ கொலையுதிர்காலம் ‘ திரைப்படம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் ‘கொலையுதிர்காலம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இத்திரைப்படத்தில் பூமிகா முக்கிய கதாராபாத்திரத்தில் நடித்துள்ளார்.

kolaiyuthir

பட தயாரிப்பு வேளைகள் முடிந்த நிலையில், அதனை வெளியிடும் நாள் குறித்து படக்குழு ஆலோசித்து வருகிறது. ஜனவரி மாதம் பொங்கல் விழாவை முன்னிட்டு ரஜினியின் ‘பேட்ட’ படமும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் வெளியாகின்றன. பொங்கலன்று இரண்டு பெரிய படங்கள் வெளியாவதால் வேறு திரைப்படங்கள் ஜனவரியில் ரிலீசாகாது என கருதப்பட்டது.

இந்நிலையில், நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர்காலம்’ திரைப்படம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகும் போஸ்டர் ஒன்றின் மூலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.