கொளத்தூர் மணி கைது!

--

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி மதுரையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கொளத்தூர் மணி சென்றார். அவருடன் திராவிடர் விடுதலைக் கழகத்தினரும் சென்றிருந்தனர்.

இதற்கிடையே  கொளத்தூர் மணி  வருவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன் உட்பட  சிலர்  உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்து முழக்கமிட்டனர்.

இந்த நிலையில்  நிலக்கோட்டை பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில்  கொளத்தூர் மணியும்  தி.வி.க.வினரும் காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.

மதுரையில் உண்ணாவிரத போராட்டம்

நீண்ட நேரம்  தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தடையை மீறி செல்ல கொளத்தூர் மணி மற்றும் ஆதரவாளர்கள் முயற்சித்தனர். அப்போது நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.