சென்னை,

ச்சநீதி மன்ற தீர்ப்பையடுத்து, தமிழகத்தை சேர்ந்த கொல்கத்தா நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்துள்ளனர்.

மேற்குவங்க டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 4 பேர் நீதிபதி கர்ணனை கைது செய்வது தொடர்பாக  சென்னை மாநகர காவல் ஆணையருடன் சந்தித்து பேசினர்.

நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளான கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபகளை கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள் வெளிநாடு செல்ல  தடை விதித்தும் அலம்பல் உத்தரவுகளை பிறப்பித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதையடுத்து, நேற்றைய விசாரணையின்போது கோபமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

அதைத்தொடர்ந்து நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் முயன்றனர். ஆனால், அவர் அங்கிருந்து தப்பி சென்னை வந்துவிட்டதாக கூறப்பட்டது.

ஆனால், சென்னையிலும் அவர் தற்போது இல்லை. அவர காளஹஸ்தி கோயிலுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நீதிபதி கர்ணனை கைது செய்ய மேற்குவங்க டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 4 பேர் கொண்ட தனிப்படையினர் சென்னை வந்து முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கரண்சின்ஹாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது நீதிபதி கர்ணனை கைது செய்வது தொடர்பாக சென்னை போலீசாரின் உதவியை கோரியதாக கூறப்படுகிறது.