Random image

தீப்பற்றி எரிந்து உயிரிழந்த தனது தாயின் உடலுடன் 18 நாட்கள் வாழ்ந்த மகன்!

இறந்த தனது தாயின் சடலத்துடன் மகன் 18 நாட்கள் அழுதுக் கொண்டே வாழ்ந்து வந்த சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது.

haunted_house

கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள பி.இ. அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் மைத்ரேய பட்டாச்சார்யா. இவர் எம்சிஏ படித்து வருகிறார். இவரது தந்தை கோரக்சந்த் பட்டாச்சார்யா நரம்பியல் மருத்துவராக இருந்து வந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு தீப்பற்றி எரிந்ததில் உயிரிழந்தார். பூஜை செய்துக் கொண்டிக்கும் போது தீப்பற்றியதாக கூறப்படுகிறார். ஆனால் அவரது உறவினர்கள், மகன் மைத்ரேய பட்டாச்சார்யா தான் தனது தந்தைக்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், மைத்ரேயாவின் தாய் கிருஷ்ணா பட்டாச்சார்யா(77) ஆசியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 18 நாட்களுக்கு முன்பு நெருப்பு வைத்து எரிக்கப்பட்டுள்ளார். உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் இருந்த கிருஷ்ணா பட்டாச்சார்யாவை கண்டு அவரது மகன் மைத்ரேயா பட்டாச்சார்யா கதறி அழுதுள்ளார். அதுமட்டுமின்றி. எரிந்த தனது தாயின் சடலத்துடன் மைத்ரேயா 18 நாட்கள் வரை வாழ்ந்தும் வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த சடலத்தை புதைக்க முடிவு செய்த மைத்ரேயா அருகில் குடியிருந்த தொழிலாளர்களை நாடியுள்ளார். அவர்கள் வந்து பார்த்த நிலையில், இது குறித்து பிதாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எரிந்த கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

எனினும் மைத்ரேயா பட்ட்டாச்சார்யா இன்னும் கைது செய்யப்படவில்லை. கிருஷ்ணாவின் இறப்பு குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்ரு வருகிறது. மைத்ரேயாவின் உறவினர்கள் தனது தந்தையை போன்று தாயையும் அவரே உடலில் நெருப்பு வைத்து கொலை செய்துள்ளதாக குற்றம்சட்டியுள்ளனர்.