ஐபிஎல்: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி

ஐபிஎல் 10 வது சீசன் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் டி20 சீசன் 10 போட்டியில் சனிக்கிழமை (15.4.17) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. இதனையடுத்து சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை அடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Kolkata Knight Riders Beat Sunrisers Hyderabad
-=-