புனேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா!

Kolkata Knight Riders won by 7 wkts

 

ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணியுடனான லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. புனே, மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீசியது. புனே தொடக்க வீரர்கள் ரகானே, திரிபாதி முதல் விக்கெட்டுக்கு 7.5 ஓவரில் 65 ரன் சேர்த்தனர். திரிபாதி 38 ரன் விளாசி சாவ்லா சுழலில் கிளீன் போல்டானார். ரகானே 46 ரன், டோனி 23, திவாரி 1, கிறிஸ்டியன் 16 ரன்னில் வெளியேறினர். சூப்பர்ஜயன்ட் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. கேப்டன் ஸ்மித் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நைட் ரைடர்ஸ்18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்து வென்றது. ராபின் உத்தப்பா அதிகபட்சமாக 87 ரன் விளாசி ஆட்டமிழந்தார். நரேன் 16 ரன், கம்பீர் 62 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். டோரன் பிராவோ 6 ரன், மணீஷ் பாண்டே ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். புனே பந்துவீச்சில் உனத்கட், கிறிஸ்டியன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். நைட் ரைடர்ஸ் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

You may have missed