அபுதாபி: மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்துவரும் கொல்கத்தா அணியின் ஸ்கோர் விபரங்களைப் பார்த்தால், இது டி-20 போட்டியா? அல்லது டெஸ்ட் போட்டியா? என்ற சந்தேகம் யாருக்குமே எழும்!
அந்த அணியின் துவக்க வீரர் ராகுல் திரிபதி 9 பந்துகளில் 7 ரன்கள், ஷப்மன் கில் 23 பந்துகளில் 21 ரன்கள், நிதிஷ் ரானா 6 பந்துகளில் 5 ரன்கள் மற்றும் தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 4 ரன்கள். முதல் 4 பேட்ஸ்மென்கள் இப்படியாக அடித்துதான் அவுட்டானார்கள்.
தற்போது களத்தில் இருக்கும் புதிய கேப்டன் இயான் மோர்கன் 17 பந்துகளில் 11 ரன்களை அடித்து ஆடி வருகிறார். புதிய கேப்டனாக பொறுப்பேற்ற இயான் மோர்கன் பொறுப்பேற்ற நேரம், அந்த அணியின் பேட்டிங் இப்படியாக ஜொலித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி அந்த அணி 15.5 ஓவர்களில் 99 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.