ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி!

ஷார்ஜா: ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது கொல்கத்தா அணி.

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் மனிஷ் பாண்டே மட்டும் அரைசதம் அடித்தார்.

பின்னர், எளிய இலக்க‍ை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி, பதற்றமின்றி நிதானமாக இலக்கை நோக்கி முன்னேறியது.

அந்த அணியின் துவக்க வீரர் ஷப்னம் கில் 62 பந்துகளில் 70 ரன்களை அடித்தார். இயான் மோர்கன் 29 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களை அடித்தார். நிதிஷ் ரானா 26 ரன்களை அடித்தார்.

முடிவில், 18 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 145 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.