சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வென்றது கொல்கத்தா அணி!

அபுதாபி: ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்றது கொல்கத்தா அணி.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது.

பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணியில், துவக்க வீரர் பேர்ஸ்டோ 28 பந்துகளில் 36 ரன்களையும், கேன் வில்லியம்சன் 19 பந்துகளில் 29 ரன்களையும், கேப்டன் டேவிட் வார்னர் 33 பந்துகளில் 47 ரன்களையும் அடித்தனர். அப்துல் சமது 15 பந்துகளில் 23 ரன்களையும் அடிக்க, அந்த அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ஆட்டம் ‘டை’ ஆனது.

இதனால், ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில், முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 1 ஓவரில் 2 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. எனவே, 3 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய கொல்கத்தா ‍அணி, 3 ரன்களை விக்கெட் இழக்காமல் எடுத்து வென்றது.