ஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 3-1 கோல் கணக்கில் வீழ்த்தியது கொல்கத்தா..!

கொல்கத்தா: தற்போது நடந்துவரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் போட்டியொன்றில் ஜாம்ஷெட்பூர் அணியை, 3-1 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணி.

இந்த லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. முதல் பாதி போட்டியானது கோல் எதுவுமின்றி சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியில், 57 வது நிமிடத்தில் கொல்கத்தாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பால் அந்த அணி முன்னிலைப் பெற்றது.

ஆட்டத்தின் 68வது நிமிடத்தில், கொல்கத்தா வீரர் கீழே தள்ளிவிடப்பட்டதால், அந்த அணிக்கு மற்றுமொரு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. இதையும் கோலாக மாற்றிய அந்த அணி, 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் ப‍ெற்றது.

அதேசமயம், 84வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இந்நிலையில், இரண்டாவது பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+3), கொல்கத்தா அணி துரிதமாக செயல்பட்டு ஒரு கோல் அடிக்க, இறுதியில் 3-1 என்ற கணக்கில் அந்த அணி வெற்றிபெற்றது.

You may have missed