கொல்கத்தாவிடம் வெறும் 2 ரன்களில் தோற்ற பஞ்சாப் அணி!

அபுதாபி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 2 ரன்களில் தோற்று தனது 6வது தோல்வியைப் பதிவு செய்தது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ஷப்னம் கில் 47 பந்துகளில் 57 ரன்களை அடித்தார். இயான் மோர்கன் 23 பந்துகளில் 24 ரன்களை அடித்தார்.

கேப்டன் தினேஷ் கார்த்திக் 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 8 பவுண்டரிகளுடன் 58 ரன்களை அடித்தார். இறுதியில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது அந்த அணி.

பின்னர், எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியில், கேப்டன் ராகுல் 58 பந்துகளில் 74 ரன்களையும், மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் 39 பந்துகளில் 56 ரன்களையும் எடுத்தனர்.

ஆனால், பிற வீரர்களிடமிருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்காத காரணத்தால், எளிதில் வெல்ல வேண்டிய ஒரு போட்டியை வெறும் 2 ரன்களில் இழந்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

கொல்கத்தா அணியின் சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த தோல்வியின் மூலமாக 7 போட்டிகளில் ஆடி, தொடர்ந்து 6வது தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.