ஒடிசாவை வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றிபெற்ற கொல்கத்தா அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியில், ஒடிசாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது கொல்கத்தா அணி.

முதல் பாதி ஆட்டத்தில், கோலடிக்க கிடைத்த வாய்ப்புகளை, இரு அணியினரும் திறமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இதனால், முதல் பாதி ஆட்டம் கோல்கள் இன்றி முடிந்தது.

இரண்டாவது பாதியில், 56வது நிமிடத்தில், ஒடிசா வீரர் கோலே அலெக்ஸாண்டர் சேம் சைடு கோலடித்தார். ஆனால், அந்தப் பந்து கொல்கத்தா வீரரின் கையில் பட்டு வந்தது தெரியவந்ததால், அந்த கோல் ரத்தானது.

இந்நிலையில், ஆட்டத்தின் ஸ்டாப்பேஜ் நேரத்தில், கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா கோடித்தார். இதற்கு, ஒடிசா அணியால் உடனடியாக பதிலடி கொடுக்க முடியாததால், போட்டியில் 1-0 என்ற கணக்கில் கொல்கத்தா வென்றது.

இந்த வெற்றியின் மூலம், இந்த ஐஎஸ்எல் தொடரில், தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது கொல்கத்தா அணி.