சென்னை: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், கோலியின் பெங்களூரு அணி, 205 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, பதிலுக்கு மிகப்பெரிய இலக்கை நோக்கி ஆடிவரும் கொல்கத்தா அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டுள்ளது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் கிளென் மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 78 ரன்களும், டி வில்லியர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்களும் அடிக்க, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி.

இந்நிலையில், மிகப்பெரிய இலக்கை விரட்டிவரும் கொல்கத்தா அணி, தற்போது, 14 ஓவர்கள் கடந்த நிலையில், 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது கொல்கத்தா அணி.

தற்போதைய நிலவரப்படி, அந்த அணி 36 பந்துகளில் 90 ரன்களை எடுத்தாக வேண்டிய மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது.