நம்பிக்கையளித்த நிதிஷ் ரானா அவுட் – கொல்கத்தா அணி 122/5

ஷார்ஜா: டெல்லி அணி நிர்ணயித்த 229 ரன்கள் என்ற மெகா டார்கெட்டை துரத்தி வரும் கொல்கத்தா அணியின் பயணத்தில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் கிடைக்காத நிலையில், 35 பந்துகளில் 4 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகள் அடித்து 58 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்து வந்த நிதிஷ் ரானா அவுட்டானார்.

அவருக்கடுத்து சிறிதுநேரத்திலேயே, கேப்டன் தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகியுள்ளார்.

தற்போது 13 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், 5 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா அணி 122 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. வெற்றிக்கு 41 பந்துகளில் 107 ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது.