சென்னை: மும்பை அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது கொல்கத்தா அணி.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயித்த 152 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய கொல்கத்தா, 17 ஓவர்கள் வரை வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை, பார்வையாளர்களுக்கு விதைத்துக் கொண்டே வந்தது.

முன்பாதியில் ராகுல் சஹார் தாக்குதல் நடத்தினாலும், அதன்பிறகு சமாளித்து ஆடிவந்தது. பந்துகளுக்கும், தேவைப்படும் ரன்களுக்கு வித்தியாசம் குறைவாகவே இருந்தது.

ஆனால், கடைசி கட்டத்தில், அதிக பந்துகள் வீணாக்கப்பட்டன. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஸ்ஸல், 15 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே அடிக்க, தினேஷ் கார்த்திக் 11 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே எடுத்தார்.

கேப்டன் மோர்கன் 7 ரன்களில் அவுட்டானதும், ஷாகிப் அல் ஹசன் 9 ரன்களில் அவுட்டானதும் நிலைமையை பாதித்தது.

எனவே, கடைசி 2 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால், கொல்கத்தா அணி 2 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே சேர்த்து, 10 ரன்களில் தோற்றது.

மும்பை சார்பில், ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளையும், பெளல்ட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.