அபுதாபி: மும்பைக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் முக்கிய பேட்ஸ்மென்கள் அனைவரும் சொதப்பினர். இதன்பிறகு, ஆட்டத்தை தன் கையில் எடுத்தார் பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ்.
36 பந்துகளை சந்தித்த அவர் 2 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 53 ரன்களை அடித்தார். புதிய கேப்டன் இயான் மோர்கன் 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 2 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் அடித்தார்.
இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்தது கொல்கத்தா அணி.
மும்பை அணி சார்பில், பந்துவீச்சாளர் நாதன் கால்டர்-நைல் 4 ஓவர்களை வீசி, 1 விக்கெட் மட்டுமே எடுத்து 51 ரன்களை வாரி வழங்கினார்.