அபுதாபி: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், இயான் மோர்கனின் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் வெறும் 84 ரன்களே எடுத்துள்ளது.
இதன்மூலம், அடுத்து சேஸிங் செய்யும் பெங்களூரு அணியினர் 6 ஓவர்கள் வரை மைதானத்தில் தூங்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் இருவரும் எடுத்தது தலா 1 ரன். நிதிஷ் ரானா டக்அவுட். முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 4 ரன்கள்.
கேப்டன் இயான் மோர்கன் 34 பந்துகளில் 30 ரன்கள். பேட் கம்மின்ஸ் 17 பந்துகளில் 4 ரன்கள். அந்த அணியிலேயே சிறப்பாக ஆடிய ஒரு பேட்ஸ்மேன் யாரென்றால், பந்துவீச்சாளர் ஃபெர்குசன். அவர் 16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் 19 பந்துகளில் 12 ரன்கள் அடித்தார்.
பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ், 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளைச் சாய்த்து, கொடுத்த ரன்கள் வெறும் 8 மட்டுமே. இதில் 2 ஓவர்கள் மெய்டன் ஓவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
அந்த அணியின் கிறிஸ் மோரிஸ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 1 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளனர். மொத்தமாக, இந்த இன்னிங்ஸில் மட்டும் 4 மெய்டன் ஓவர்கள்.
ஆக மொத்தத்தில், இப்போட்டியில் கொல்கத்தா அணி, எதிர்மறையான சாதனைகள் பலவற்றை செய்துள்ளது எனலாம்.