மராவதி: பிரபல திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் ஒருவரின் பெயரில், கிறிஸ்தவ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக வெளியான நிலையில், அவர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக போர்க்கொடி தூக்கி உள்ளது.

திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக இருந்து வருபவர்  கொலுசு பார்த்தசாரதி. இவரது பெயர் கிருஷ்ணா மாவட்டத்தி உள்ள கிறிஸ்துவ அமைப்புகளின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடர்பான அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது.  இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தனது பெயர் இடம்பெற்றது தனக்கு தெரியாது என அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த,  ஆந்திர பாஜக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி, டிடிடி வாரிய உறுப்பினர் கொலுசு பார்த்தசாரதி உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அனுமதியின்றி கிருஷ்ணா மாவட்ட கிறிஸ்துமஸ் அரை கொண்டாட்ட அழைப்பில் கிறிஸ்தவ அமைப்புகள் எவ்வாறு பெயரை வெளியிட முடியும் என்று கேள்வி எழுப்பியதுடன், அதுதொடர்பான அழைப்பிதழையும் செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.

இந்த அழைப்பிதழானது, கிருஷ்ண மாவட்டத்தில் காங்கிபாடு மண்டல் உப்பளூரு கிராம கிறிஸ்தவ அமைப்புகளால் அச்சிடப்பட்டுள்ளது.  இதை சுட்டிக்காட்டிய பானுபிரகாஷ்,  ஒரு டிடிடி வாரிய உறுப்பினர் என்ற முறையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்க அவர்களின் அழைப்பை அவர் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும், கிருஷ்ணா மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கொலுசு  பார்த்தசாரதி பங்கேற்கக்கூடாது என்று மிரட்டியதுடன், அவர் ஒன்று  வெங்கடேஸ்வர சுவாமியை  கும்பிட வேண்டும், இல்லையென்றால் யேசுகிறிஸ்துவை கும்பிட வேண்டும், ஏதாவது ஒரு முடிவுககு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதை மீறி, பார்த்தசாரதி , கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்றால், டிடிடி வாரிய உறுப்பினர் பதவியை  ராஜினாமா செய்யும் வரை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தை தொடரும் என்றும் அவர் கூறினார்.  அதே அழைப்பின் பேரில் விஜயவாடா குழு உறுப்பினர் பெயரும் துர்கா மல்லேஸ்வர தேவஸ்தானமும் வெளியிடப்பட்டதாக பானு பிரகாஷ் ரெட்டி சுட்டிக்காட்டியதுடன்,  இது பெரும்பான்மையான சமூக மக்களை பாதிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது,  உள்ளூர் பாஜக தலைவர்கள் காளி புஷ்பலதா மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.