செயின்ட் லூயிஸ் செஸ் – இந்தியாவின் கொனேரு ஹம்பி உலக சாம்பியன்!

நியூயார்க்: செயின்ட் லூயிஸ் செஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் உலகின் முன்னணி செஸ் வீராங்கனைகள் பங்கேற்கும் செஸ் தொடர் நடைபெற்றது.

இதில், 9வது மற்றும் கடைசி சுற்றுக்கு தேர்வான இருவருமே இந்திய வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கொனேரு ஹம்பியும், ஹரிகா துரோணவள்ளியும் மோதினர்.

ஹம்பி கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். இப்போட்டி டிரா ஆனது. ஆனால், மற்றொரு போட்டியில் உலக சாம்பயின் சீனாவைச் சேர்ந்த ஜு வென்சுன், ரஷ்யாவின் அலெக்ஸான்ட்ராவை வீழ்த்தினார்.

இந்நிலையில், 9வது சுற்று முடிவில் 6 புள்ளிகளைப் பெற்றிருந்த ஹம்பி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். சீன வீராங்கனைக்கு இரண்டாமிடமும், ஹரிகாவுக்கு 5வது இடமும் கிடைத்தன.