கொரோனா லாக்டவுன் மக்கள் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது.வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் மற்றவர்களை போலவே சினிமா பிரபலங்களும் வீட்டிலிருந்தே சமூக வலைத்தளத்தில் பெரும்பான்மையான நேரத்தை கழித்து வருகின்றனர் .
இந்நிலையில் நடிகர் சாந்தனு மற்றும் அவர் மனைவி சேர்ந்து குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த குறும்படத்துக்கு ‘கொஞ்சம் கரோனா கொஞ்சம் காதல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

மொத்தம் 7:28 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது முழுக்க முழுக்க வீட்டில் ஐபோனிலேயே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பது, இருக்கும் பொருட்களை கொண்டு சிக்கனமாக வாழ்க்கையை நடத்துவது, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உதவுவது போன்ற விஷயங்களைப் பற்றி இப்படம் பேசுகிறது.