கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட முடியாது: உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுஉலைகளை மூட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பு கூறி உள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் 3 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் பல அணுஉலைகள்  அமைக்க ஆயத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் எனறு  பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தரராஜன்  என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் பின்பற்றப்படவில்லை என்றும்,  அணு கழிவுகளை சேகரிக்க வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்று கூறியிருந்தார். இதற்கான பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, மத்தியஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் கூடங்குளத்தில் அணு கழிவுகளை சேமிப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முடிக்க மேலும் அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று கூறயது. மேலும், அணுக்கழிவுள சேமிப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள 2022 ஆண்டு வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், அணுக்கழிவுகளை பாதுகாக்க இதுவரை எந்தவித நடவடிக்கையையும் கூடங்களும் அணுஉலை நிர்வாகம்  மேற்கொள்ளவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருப்பது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.