கூவாக சித்திரை திருவிழா! அசத்திய திருநங்கைகள்!

விழுப்புரம்:

விழுப்புரம்  கூத்தாண்டவர் கோவிவில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான  திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு கோடை காலத்திலும் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள அரவாண் எனப்படும் கூத்தாண்டவர் கோவிலில்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

சித்திரை மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என திருநங்கைகள் ஆடிப்பாடி அசத்துவர். சுமார் ஒரு வார காலம் இந்த விழா நடைபெறும்.

சித்ரா பவுர்ணமி தினத்தன்று அரவாணிகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து ‘மிஸ் கூவாகம்’  நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  இந்த அழகிப்போட்டியில் சென்னை சேர்ந்த ஆன்ட்ரியா என்ற திருநங்கை முதல்பரிசை தட்டிச்சென்றார்.

சேலத்தை சேர்ந்த கவி என்பவருக்கு இரண்டாவது பரிசும்,  மதுரையைச் சேர்ந்த வர்னிகா என்பவர்  மூன்றாம் பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.

முதன்முறையாக திருநங்கைகளில் கிரேஸ் பானு என்பவர்  என்ஜினியராகப் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு மேடையில் சிறப்பு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை சோனியா போஸ் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் அரவாணிகள் தாலிகளை அறுத்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதனர். அத்தோடு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வந்த சித்திரைத் திருவிழா முடிவுக்கு வந்தது.