காங்-மஜத கட்சி எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஈகிள் கார்டன் ரிசார்ட்

பெங்களூரு:

ர்நாடகாவில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 104 இடங்களை பிடித்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் வஜுபாய் வோலா அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜ பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெற 100 கோடி ரூபாய் தருவதாக கூறி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக மதசார்பற்ற கட்சி தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில், பாஜகவின் பிடிக்குள் சிக்காமல் இருக்க  காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம், மற்றும் 2 சுயேச்சைகள்  மைசூர் சாலையில் உள்ள ஈகிள் கார்டன் சொகுசு விடுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் நடைபெற்ற கூவத்தூர் சம்பவம் தற்போது கர்நாடகாவிலும் அரங்கேறி உள்ளது.

காங்-மஜத கட்சி எம்எல்ஏக்கள் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்ட காட்சி

பாரதியஜனதாவின் ஆசை வார்த்தைக்கு மயங்காமல் தடுக்கவும், பாஜவின் குதிரை பேரத்தை தடுக்கவுமே எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

, காங்கிரசின் 77 எம்.எல்.ஏக்கள் பிடதியில் உள்ள ஈகிள்டன் விடுதிக்கு இரண்டு பேருந்துகளில் நேற்றிரவு அழைத்து வரப்பட்டனர். அவர்களை விரைவில் ராகுல் காந்தி சந்திக்க உள்ளதாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று மதசார்பற்ற ஜனதா தளமும் தனது எம்.ஏல்ஏக்களை பிடதி நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளது.

சொகுசு விடுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சித்தராமையா, குலாம் நபி ஆசாத் ஆகியோரை சந்தித்து குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அதிகாலை நீடித்த ஆலோசனைக்குப் பின் குமாரசாமி புறப்பட்டுச் சென்றாதாக கூறப்படுகிறது.

காங்-மஜத கட்சி எம்எல்ஏக்கள் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்ட காட்சி

இந்நிலையில் காங். மஜத கட்சியினர் இன்று காலை கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.