கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்து வழங்குவதாக ரவுடி பிக்சர்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன், “நயன்தாரா நாம் தயாரித்து வழங்குவதற்காக நீ தேர்ந்தெடுக்கும் தனித்துவமான கதைகளால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

புதுமுகங்கள் நடித்த இந்த திரைப்படத்தை பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்துகொள்கிறது.

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.