லகாபாத்

கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 80 குழந்தைகள் மரணம் அடைந்ததில் மருத்துவர் கபீல் கான் அலட்சியமாக நடந்துக் கொள்ளவில்லை என அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் உத்திரப் பிரதேசத்தில் கோரக்பூர் நகரில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சுமார் 80 குழந்தைகள் மரணம் அடைந்தது பெரும் பரபரப்புக்குள்ளாகியது.    ஆக்சிஜன் விநியோகிப்பவருக்கு யோகி அரசு பணம் தராததால் ஆக்சிஜன் தட்டுப்பாடு உண்டாகியதாக கூறப்பட்டது.   இது குறித்து விசாரணை நடத்திய அரசு அந்த மருத்துவமனையின் மருத்துவர் கபீல் கானை கைது செய்தது.

கபீல் கான் தமக்கும் இந்த விவகாரத்துக்கும் சம்மந்தம் இல்லை எனவும் தாம் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.   மேலும் இது குறித்து அவர் நீதிமன்றத்துக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.   கானுக்கு சிறையில் மருத்துவ சிகிச்சை அளிக்காமலுள்ளதாக அவர் மனைவி புகார் அளித்ததை ஒட்டி சிறை அதிகாரிகள் அவரை மருத்துவ பரிசோதனக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.   கபீல் கானுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கபீல் கான் ஜாமினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா, “இந்த குழந்தைகள் மரணத்துக்கு கபீல் கான் காரணம் என்பதற்கு எந்த ஒரு சட்சியமும் இல்லை.   அவர் அலட்சியமாக நடந்துக் கொண்டதாகவும் தெரியவில்லை.

இந்த விவகாரத்தில் அவரிடம் மருத்துவத் துறை விசாரணை எதுவும் நடத்தவில்லை.    மேலும் ஆக்சிஜன் விநியோகிக்கும் நிறுவனத்துடன் கான் எந்த ஒரு வர்த்தகத் தொடர்பிலும் இருந்ததாக தெரியவில்லை.   இதனால் அவர் சாட்சிகளை மிரட்டக் கூடும் அல்லது சாட்சியங்களை மாற்றக் கூடும் என்னும் குற்றச்சாட்டுக்கு இடம் இல்லை” எனக் கூறி உள்ளார்.