தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைமும் கைப்பற்றியுள்ளன.

இந்த படத்தின் தெலுங்கு உரிமையை தற்போது முன்னனி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான east coast production நிறுவனத்தின் மகேஷ் எஸ் கோநீறு காரு என்பவர் வாங்கியுள்ளதாக தவல்கள் கசிந்துள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘தளபதி 64’ என்று அழைத்து வரப்பட்ட இந்தப் படத்துக்கு ‘மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரியப் படமான ‘சைலன்ஸ்ட்’ படத்தின் தழுவல்தான் ‘மாஸ்டர்’ எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியாவில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமே ’சைலன்ஸ்ட்’.

இப்படம் வெளியான சமயத்தில் தென் கொரியாவில் பெரும் பொது விவாதத்தை உருவாக்கியது. புதிதாகச் சட்டங்கள் வரையறுக்கப்பட்டு பாலியல் வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் சிலருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. வசூல் ரீதியாகவும், தொடர்ந்து மூன்று வாரங்கள் வசூலில் முதலிடத்தில் இருந்த ’சைலன்ஸ்ட்’, பத்து வாரங்கள் தொடர்ந்து தென் கொரியத் திரையரங்குகளில் ஓடியது.