கலர்ஸ் தமிழில் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ராதிகா…!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் கோடீஸ்வர நிகழ்ச்சி ‘கோடீஸ்வரி’ என்ற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா தான் தொகுத்து வழங்குகிறார்.

ஆசியாவில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் முதல் பெண் தொகுப்பாளர் என்ற பெருமையை நடிகை ராதிகா பெற்றிருக்கிறார்.

வரும் டிசம்பர் 23 ஆம் தேதி முதல் இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி.