சென்னை:

கோவை 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில், குற்றவளி சந்தோஷ் குமாருக்கு  கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம்  மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

டந்த மார்ச் மாதம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1வது வகுப்பு படிக்கும் கோவை 6 வயது சிறுமி, தனது வீடு அருகே உள்ள நபரால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டார்.

இது பெரும் பரபரப்பையும், மக்களிடையே ஆத்திரத்தையும் ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக,  தொண்டா முத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்  குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், இது தொடர்பாக வழக்கு  கோவை மகளிர் நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், விசாரணை நடைபெற்று வந்தது.

இதில், சந்தோஷ்குமார் தான் என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.

அதன்படி, குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்துள்ள நீதிமன்றம், ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும்,  சிறுமி பாலியல் வன்கொடுமை மரபணு பரிசோதனையில் மற்றொரு நபரின் டி.என்.ஏ இருப்பது தெரியவந்துள்ளதாகவும்,, தொடர்ந்து வழக்கை விசாரிக்கவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சிறுமியின் குடும்பத்திற்க்கு ரூ.10 லட்சம் அரசு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்து உள்ளது.