கோவை அருகே 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது ஊர்ஜிதம்: உடற்கூறு ஆய்வறிக்கை தகவல்

கோவை:

கோவை அருகே மர்மமான முறையில் உடலில் ரத்தக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட  6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த  சம்பவம் தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


கோவை துடியலூர் அருகே  நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள கடைக்கு சென்ற 1வது வயது படிக்கும் 6  சிறுமி  திடீரென காணாமல் போனார். அவரை பல இடங்களில் இரவு முழுவதும் தேடி வந்த அவரது குடும்பத்தினார், அருகே உள்ள ஒரு முட்டுச்சந்தில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது அடுத்த நாளில் காலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்காரணமாக  அந்தி சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்க லாம் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனையில், 6வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்ளது ஊர்ஜிதமாகி உள்ளது.இதையடுத்து கொலை வழக்குடன் போக்சோ சட்டப்பிரிவின் கீழும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெரியநாக்கன் பாளையம் டிஎஸ்பி மணி தலைமையில் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் காரணமாக   அந்த பகுதியை சேர்ந்த   வசந்த், விஜயகுமார் ஆகியோரை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மக்கள் ஒன்றிணைந்து, கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூரில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அவர்களுக்கு  ஆதரவாக திமுக, எஸ்டிபிஐ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

தவறு செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.