கோவை சகோதரர்கள் நீச்சலில் சாதனை!

கோவை யுவ பாரதி பப்ளிக் பள்ளியில் படிக்கும் சுதே மற்றும் மிருதுல் ஆகியோர் உடன் பிறந்த சகோதரர்கள். இவர்கள் நீச்சலில் புதிய சாதனை படைத்துள்ளனர்.

15050072_1016670281810515_1796248140_nஇருவரும் சேர்ந்து 22.65 கிலோ மீட்டர் தூரத்தை எட்டு மணி நேரத்தில் நீந்தி கடந்தார்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் சுதே ஐந்து மணி நேரம் நீந்தி 13.35 கிமீ தூரத்தை கடந்தார். பிரெஸ்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக், பட்டர் ஃபிளை ஸ்ட்ரோக் மற்றும் ஃப்ரீ ஸ்டைல் ஆகிய நான்கையும் உள்ளடக்கிய மெட்லே டெக்னிக் மூலம் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இவருடைய தம்பியான மிருதுல், ஃப்ரீஸ்டைல் நீச்சல் மூலம் 9.3 கிமீ தூரத்தை மூன்று மணிநேரங்களில் கடந்தார். இது இந்திய அளவில் புதிய சாதனையாகும்.

கார்ட்டூன் கேலரி