கோவை:

கோயம்புத்தூரில், மாநகர பேருந்து ஒன்றில்,  மஞ்ச தண்ணி தெளிச்சு.. வேப்பிலை கட்டி விட்டு, நோய்தொற்று பரவாமல் தடுத்துள்ள செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வரும் நிலையில், நமது பாரம்பரிய முறைப்படி, மஞ்சள் தூள், வேப்பிலை போன்ற கிருமிநாசினிகள் மூலம தொற்று பரவாமல் தடுக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகறது.

பொதுவாகவே வெயில்காலங்களில் வரும் அம்மை நோய் போன்ற நோய்களை தடுக்க வாசல்களில் வேப்பிலை கட்டுவது வழக்கம். அதுபோல தற்போது கோவையில், கொரோனாவை தடுக்க பேருந்துகளில் வேப்பிலை கட்டி, மஞ்சள் தெளித்து, இயக்கப்பட்டது,

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுப்பாளையம் பகுதிகளில் மக்கள் இயற்கை கிருமி நாசினியான மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை ஊர் முழுவதும் தெளித்து வருகின்றனர். பல வீடுகளின் முன்பு சாணக்கரைசலைக் கொண்டு முத்தம் தெளித்து வருகின்றனர்…

இந்த நிலையில்தான் கோவை மாநகர பேருந்து ஒன்று வேப்பிலை தோரணத்துடன் பவனி வந்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பேருந்தின், ஒவ்வொரு சீட்களிலும், கம்பிகளிலும், ஏன் பஸ்ஸின் மேற்பரப்பிலும் வேப்பிலை தோரணங்கள் உள்ளன… இவைகள் வீடியோ, போட்டோக்களாக பொதுமக்கள் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்..