கோவை: யானையால் தாக்கப்பட்டு வன ஊழியர் பலி

கோவை அருகே யானையால் தாக்கப்பட்டு வனக்காவலர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வனத்துறை ஆர்.ஆர்.டி.  (Rapid Reaction Team) பிரிவில் வெங்கடேஷ் என்பவர் பணியாற்றிவந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1.15 மணி அளவில் தடாகம் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற வெங்கடேஷ், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது யானை ஒன்று மூர்க்கத்தனமாக வெங்கடேஷை தாக்கியது. இதில் கடுமையாக காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இவரது தந்தை ராமசாமி வனத்துறையில் காவலராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.