அனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிப்பு…!

சென்னை: இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் கடந்த 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. சென்னை கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு சில்லரை வியாபாரிகள், பணியாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் அனைவரும் கோயம்பேடு வணிக வளாக அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுழற்சி முறையில் 50% கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதித்தது. இந் நிலையில் தற்போது ஒவ்வொரு வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2வது, 4வது வார ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.