கே.ஆர்.ராமசாமி காங். சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு.

ramasamyதமிழக சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராக காரைக்குடி எம்.எல்.ஏ. திரு.கே.ஆர்.ராமாசாமி அவர்களும், கொறடாவாக விளவங்கோடு எம்.எல்.ஏ. திருமதி.விஜயதரணி அவர்களும் செயல்படுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்வோவன் அவர்கள் சற்றுமுன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. காரைக்குடி தொகுதியில் கே.ஆர். ராமசாமி, விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி, நாங்குநேரியில் ஹெச்.வசந்தகுமார், தாராபுரத்தில் வி.எஸ்.காளிமுத்து, உதகையில் கணேஷ், கிள்ளியூரில் ராஜேஷ், குளச்சலில் பிரின்ஸ், முதுகுளத் தூரில் பாண்டி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.