https://www.facebook.com/VijayTelevision/videos/vb.211311612281410/645692999592302/?type=2&theater

விஜய் டிவியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’.

சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.16 வயதுக்கு மேற்பட்டோர் சீனியர் பிரிவிலும், அதற்கு கீழுள்ளோர் ஜூனியர் பிரிவிலும் பங்கேற்கலாம்.

ஜூனியர் பிரிவின் 7-வது சீஸனுக்கான ஆரம்ப வேலைகள் நடைபெற்று வந்தன. தற்போது ‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் சீஸன் 7 பிப்ரவரி 22-ம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், ஷங்கர் மகாதேவன், சித்ரா, கல்பனா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர். அவர்களுடன், நடிகர் நகுலும் ஒரு நடுவராகப் பங்கேற்கிறார்.

இந்நிலையில் #TeamSelectionRound ல் #Krishaang க்ரிஷாங்க் பாடும் புத்தியுள்ள மனிதரெல்லாம் பாடல் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது .

ரங்கா ராவ் – பானுமதி நடித்த ’அன்னை’ என்ற படத்தில் ‘புத்தியுள்ள மனிதரெல்லாம்’ என்ற பாடலை நடிகரும், பாடகருமான சந்திரபாபு பாடியிருப்பார். இந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

தற்போது க்ரிஷாங்கின் குரலில் உற்சாகமும், அவரின் தெளிவான உச்சரிப்பும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. அதோடு சந்திரபாபுவைப் போல தனித்துவமான மாடுலேஷன்களுடன் க்ரிஷாங் பாடுவது, பலரையும் கவர்ந்துள்ளது.