போபால்:

ந்துாரி கோழி இறைச்சிைய தவிர்த்து, கடக்நாத் கோழிகளை உண்ணுமாறு, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜாபுவா வேளாண் விஞ்ஞான மையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

\இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இந்த மையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது;

கிரிக்கெட் வீரர்கள் தந்துாரி சிக்கன் விரும்பி உண்பதாக அறிந்தோம். இதில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. ஆனால் கடக்நாத் கோழிகளில் கொழுப்புச் சத்து குறைவாகவும், புரதச் சத்து அதிகமாகவும் இருப்பதாக, ஐதராபாத் இறைச்சி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைக்க கடக்நாத் கோழி சாப்பிடுங்க: விராட் கோலிக்கு வேளாண் ஆராய்ச்சி மையம் ஆலோசனை

எனவே, கிரிக்கெட் வீரர்கள் கடக்நாத் கோழிகளை உண்ண வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைச்சி, முட்டை ஆகிய இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்யும் கோழி இனம் ’கடக்நாத்’.

இதன் தோல், அலகு, கால் விரல்கள், பாதம் போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கின்றன. கொண்டை, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. இந்த கோழிகளில் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்து காணப்படுகிறது.