கொரோனா ஊரடங்கால் இந்திய அளவில் எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை.

இதில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சில படங்கள் ஓடிடி வெளியீட்டை உறுதிப்படுத்தின. ஆனால், தெலுங்கில் எந்தவொரு படமுமே ஓடிடி வெளியீட்டுக்கு முன்வரவில்லை.

இந்நிலையில் தற்போது தெலுங்குத் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு விளம்பரத்தையும் படக்குழு மேற்கொள்ளவில்லை.

ரவிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ படத்தில் சித்து, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷீரட் கபூர், ஷாலினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ், வயகாம் 18 மற்றும் சஞ்சய் ரெட்டி மூவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.