சென்னை,

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா செல்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இன்று ஆந்திரா செல்லும் தமிழக முதல்வர் , ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுகிறார். அப்போது தெலுங்கு கங்கை திட்டம் குறித்து இருவரும் விவாதிப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இன்று மதியம் 1 மணி அளவில் இரு மாநில முதல்வர்களும் சந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடும்படி ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அதைத்தொடர்ந்து இன்று ஆந்திரமாநிலம் அமராவதி சென்று ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கிறார்.

இந்த தகவலை ஆந்திர நிதி அமைச்சர் யனாமலா ராமகிருஷ்ணநாயுடு ஆந்திராவில் தெரிவித்தார்.

நதிநீர் பேச்சுவார்த்தைக்காக தமிழக முதல்வர் ஒருவர் ஆந்திரா செல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.