கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்பி டாக்டர் செல்லக்குமாருக்கு கொரோனா….

சென்னை: கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்பி டாக்டர் செல்லக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் தினசரி 6ஆயிரம் பேருக்கு தொற்றுபாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதற்கிடையில், கொரோனா பொதுமுடக்கம் காலத்தில், பொதுமக்களுக்கு சேவையாற்றிய அரசியல் கட்சித்தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில்,  அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் தனது தொகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந் நிலையில், அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, அவர்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.