தமிழக ஆளுநராக பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜு நியமனம்?

 

தமிழக ஆளுநராக இப்போது பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வருகிறார்.

அவரை மாற்றி விட்டு, கிருஷ்ணம் ராஜுவை புதிய ஆளுநராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.

கிருஷ்ணம் ராஜு யார்?

தெலுங்கு சினிமா நடிகரான இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு பா.ஜ.க. வேட்பாளராக, ஆந்திர மாநிலம் காக்கிநாடா மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது , அவரது அமைச்சரவைவில் உள்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

சிரஞ்சீவி, பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்த போது அதில் சேர்ந்தார்.

ஆனால் கொஞ்ச நாட்களில் அதிலிருந்து விலகி மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து விட்டார்.

தமிழக ஆளுநராக கிருஷ்ணம் ராஜு நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவருக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

– பா. பாரதி