உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி தற்போது வரை கொரோனாவால் 7529 பேர் பலியாகி உள்ளனர். 184, 976 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்படும் ஹாலிவுட் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. முதலில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், தானும் தன் மனைவி ரீட்டா வில்ஸனும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதை தொடர்ந்து, கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் கிறிஸ்டோபரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். நானும் எனது குடும்பமும் (பிறருக்கு நோயைப் பரப்பாமல் இருப்பதற்காக) சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். அனைவரும் ஒன்று சேர்ந்தால் இந்த வைரஸை விரட்டியடிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.