லிங்குசாமியின் அடுத்த படத்தில் ராம் பொதினேனிக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி….!

தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி இயக்குநர் லிங்குசாமியுடன் புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.

ஒரு சில வாரங்களுக்கு முன் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நடிகர் ராம் பொதினேனி ஜோடியாக நடிக்கிறார் எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

#RAPO19 திரைப்படம் முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ் ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது.

மிகப்பெரும் பட்ஜெட்டில் பெரும் ஆளுமைமிக்க தொழில்நுட்ப கலைஞர்களுடன் மாஸ் ஆக்சன் படமாக #RAPO19 படம் உருவாகிறது. தயாரிப்பாளர் சித்தூரி ஶ்ரீனிவாசா Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் 6 வது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.