சீமானுக்கு ஒரு நீதி, நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதியா? தமிழகஅரசு மீது கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை:

சீமானுக்கு ஒரு நீதி, நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதியா? என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளது காவல்துறை. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளர்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,

ராஜீவ் காந்தியைக் கொலை செய்து புதைத்தோம் என்று பேசிய சீமானை நீங்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

மோடி, அமித்ஷாவுக்கு எதிராகப் பேசினால் உடனடியாகக் கைது செய்கிறீர்கள். ஆனால், ராஜீவ் காந்திக்கு எதிராகப் பேசினால் எந்த நடவடிக்கையும் இல்லை.

நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி ?
சீமானுக்கு ஒரு நீதியா ?

என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Against CAA, amithsha, CAA, CAA Protest, ks alagiri, KS Alagiri condemned, modi, Nellai Kannan, Nellai Kannan arrest, Tamilnadu Government, TNCC LEADER, கே.எஸ்.அழகிரி, நெல்லை கண்ணன்
-=-