திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்- கே.எஸ்.அழகிரி

சென்னை:
திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான். மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தித்தான் 2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டி என்பதை மு.க.ஸ்டாலின்- ராகுல்காந்தி அறிவிப்பர்.

எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் ரஜினியையும் கமலையும் எங்கள் அணியில் வரவேற்போம்.

மதுரையை 2வது தலைநகராக அறிவித்தால் வரவேற்போம்; தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.