சாலை விதிகளை மீறி அரசு பேருந்தை இயக்கிய கேரள ஓட்டுநர்: பேருந்தை மறித்து பாடம் எடுத்த பெண்

கேரளாவில் சாலை விதிகளை மீறி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு, பெண் ஒருவர் பாடம் புகட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தின் அரசு பேருந்தான KSRTC பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஒருவர், எதிரில் வரும் வாகனத்திற்கு வழி விடாமல், தனக்கு முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் வேகமாக வந்துள்ளார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், பேருந்துக்கு வழி விடாமல் கோபத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் நிற்க, வேறு வழியின்றி சாலை விதிகளுக்குட்பட்டு பேருந்தை இயக்கிச் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

சாலை விதிகளை மீறிய அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு, பெண் ஒருவர் பாடம் எடுத்துள்ளதாக கூறி வைரலாகும் இந்த வீடியோவிற்கு சமூகவலைதளத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.