பெங்களுரூ:
ர்நாடக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் எம் டி பாட்டில் ஆந்திராவுக்கும், தெலுங்கானாவுக்கும் இடையிலான கிருஷ்ணா நதி தகராறை குறிக்கும் மத்திய அரசின் ஜல் சக்தி அபியானை எதிர்க்க முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவிடம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் எம்பி பாட்டில் தெரிவித்துள்ளதாவது: இது மிகவும் ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது, இந்த பிரச்சனையை மாநில அரசு இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது… இதை நாம் எந்த நிலையிலும் எதிர்த்தாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக நாம் மத்திய அரசிடம் பல விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது, மாநில அரசு இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை எனில் அது நமக்கே பேரழிவை தந்துவிடும் என்று தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

கிருஷ்ணா நதி மகாராஷ்டிராவின் மகாபலேஸ்வரரில், உருவாகி கிழக்கில் பாயும் ஒரு நதியாகும், இது மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா வழியாக சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.