கூடங்குளத்தில் 28 ஆயிரம் மில்லியன் யுனிட் மின் உற்பத்தி : திட்ட இயக்குனர்

கூடங்குளம்

கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையம் இதுவரை 28ஆயிரம் மில்லியன் அதாவது 2800 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்துள்ளதாக திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடெங்கும் இந்தியாவின் 72 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.    அவ்வகையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நடந்த விழாவில் திட்ட இயக்குனர் ஜெயகிருஷ்ணன், முதுநிலை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, முதுநிலை கட்டுமான பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

அந்த விழாவில் திட்ட இயக்குனர் ஜெயகிருஷ்ணன், “கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.   இந்த நிலையத்தின் முதல் அணு உலையில் இருந்து இதுவரை 21,131 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.   அதே போல் இரண்டாம் உலையில் இருந்து 6,803 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தற்போது 3 மற்றும் 4 ஆம் அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.   விரைவில் 5 மற்றும் 6 ஆம் கட்ட அணு உலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.    இங்கு மின் உற்பத்தி தவிர சமுதாய பணிகளையும் நடத்தி வருகிறோம்.  அத்துடன் பல சமுதாய அமைப்புகல் உதவியுடன் வளர்ச்சிப் பகுதிகளையும் செய்து வருகிறோம்.” என உரையாற்றினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Kudangulam nuclear power station produced 28000 million units so far
-=-