கூடங்குளம்: அணு உலை கட்டுமானம்! மோடி – புதின் தொடங்கி வைத்தனர்!!

கோவா,

கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்திய பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கலந்துகொண்டு காணொளி காட்சி மூலம் கட்டுமாணப் பணிகளை தொடங்கி வைத்தனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யநாட்டு நிதி உதவியுடன் அணுமின் சக்தி திட்டம் செயல்படுத்தப்படு கிறது. தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

koodangulam

முதல் அணு உலையில் 2014-ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கியது. 2-வது அணு உலையில் கடந்த மாதம் 29-ந் தேதி மின் உற்பத்தி தொடங்கி சோதனை அடிப்படையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து 2-வது அணு உலையில் நேற்று மின் உற்பத்தி தொடங்கியது.

மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் அமைப்பதற்கான அகழ்வு பணிகள் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி துவங்கின.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் நாளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அகழ்வு பணிகள் முடிவுற்ற இடத்தில் சமதளமாக்க கான்கிரீட் போடக் கூடிய பணியை தொடங்கி வைத்தனர்.

இந்த மூன்று மற்றும் நான்காவது அணுஉலைகளை பொறுத்த வரை ரூ.36,747 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்பட உள்ளது.

இதற்கு ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகம் மற்றம் இந்திய அணுமின் உற்பத்தி கழகமும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.

கோவாவில் பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் கட்டுமானப் பணிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

kodan

நிகழ்ச்சியில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர், இந்திய அணுசக்தி தலைவர் சதீஷ் குமார் சர்மா, ரஷ்ய அணுசக்தி நிறுவனத் தலைவர் மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3-வது அணு உலையில் 2022-ம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்க அணுசக்தி கழகம் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.